பாம்பன் கடல் பகுதியில் மீன்பிடித்த மீனவர்கள்


பாம்பன் கடல் பகுதியில் மீன்பிடித்த மீனவர்கள்
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு பயந்து பாம்பன் கடல் பகுதியிலேயே மண்டபம் மீனவர்கள் மீன் பிடித்தனர்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

இலங்கை கடற்படை

ராமேசுவரம், மண்டபம் பகுதியில் இருந்து கடந்த 14-ந் தேதி மீன் பிடிக்க சென்ற 5 விசைப்படகு மற்றும் 27 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ராமேசுவரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட தமிழக கடலோர பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படும் சம்பவங்களும் கடந்து சில மாதங்களாகவே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று மண்டபத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு சென்ற மீனவர்கள் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைக்கு பயந்து கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்வதை தவிர்த்தனர்.

பாம்பன் பகுதியில்

இதன் காரணமாக பெரும்பாலான படகுகள் மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியிலேயே மீன் பிடித்து கொண்டிருந்தன. குறிப்பாக பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து பார்க்கும்போது ஏராளமான விசைப்படகுகள் மீன்பிடித்து கொண்டிருந்தது தெளிவாக தெரிந்தது.

இதை ரோடு பாலத்தில் நின்றபடி சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தபடி சென்றனர்.


Next Story