பூம்புகாரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை


பூம்புகாரில் விவசாயிகளுக்கு ஆதரவாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 12 Oct 2023 12:15 AM IST (Updated: 12 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் விவசாயிகளுக்கு ஆதரவாக காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகா அரசை கண்டித்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

மயிலாடுதுறை

திருவெண்காடு:

காவிரியில் காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகா அரசை கண்டித்து நேற்று காவேரி டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சியினர், விவசாய சங்கங்கள், பிற அரசியல் கட்சியினர் அழைப்பு. அதன்படி நேற்று பூம்புகார் பகுதியில் நடைபெற்ற போராட்டம் காரணமாக சுற்றுலா வளாகம் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு செல்லவில்லை, இதனால் பூம்புகார் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல் பூம்புகார், தர்ம குளம், திருவெண்காடு, மங்கை மடம், திருமுல்லைவாசல் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பல இடங்களில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நேற்று ஒரு நாள் விவசாயப் பணிகளை புறக்கணித்தனர். செம்பனார்கோவில், திருக்கடையூர், ஆக்கூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தன.


Next Story