நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்... விற்பனை அமோகம் - மீனவர்கள் மகிழ்ச்சி...!


மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நாகை மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள் காலை முதலே ஆர்வத்துடன் மீன்களை வாங்கி செல்கின்றனர்.

நாகப்பட்டினம்,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து இன்று உழவர் திருநாளான மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்படுகின்றது. இன்று பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை,நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட 27 மீனவர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு, 700 விசைப்படகுகள் கடலுக்குச் சென்று மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி ஏற்கனவே கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் கரை திரும்பி வருகின்றனர். அவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்குவதற்காக மீன்பிடி துறைமுகத்தில் வியாபாரிகள் வருவது வழக்கம். இன்று மாட்டுப்பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை தினம் என்பதால் வெளிமாநில வியாபாரிகள் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள் உள்ளூர் வியாபாரிகள் குவிந்தனர்.

இதேபோல் நாகை, வேளாங்கண்ணி, சிக்கல், கீழ்வேளூர், திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்கி செல்கின்றனர். மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது வழக்கமாக 550 முதல் 800க்கு விற்பனையான வஞ்சிரம் மீன் ரூ. 1,000 த்திற்கும், அதேபோல் சீலா ரூ. 400, துள்ளு கெண்டை ரூ. 250,

நெத்திலி மீன் ரூ.200, இறால் ரூ. 350க்கும் விற்பனையானது.


Next Story