ரூ.6¾ கோடியில் மீன் இறங்குதளம், ஏலக்கூடம்


ரூ.6¾ கோடியில் மீன் இறங்குதளம், ஏலக்கூடம்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தில் ரூ.6¾ கோடியில் மீன் இறங்குதளம், ஏலக்கூடம் அமைக்கும் பணியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை

பொறையாறு:

தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தில் ரூ.6¾ கோடியில் மீன் இறங்குதளம், ஏலக்கூடம் அமைக்கும் பணியை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ரூ. 6 கோடியே 83 லட்சம் .....

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூர் மீனவர் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள குட்டியாண்டியூர் கிராமத்தில் கடல் அலைகள் அதிகமாக ஏற்பட்டு கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கடல் அரிப்பை தடுக்கும் வகையில் குட்டியாண்டியூர் கடற்கரையையொட்டி கடலில் கிழக்கு மேற்காக நேர் கல் தடுப்புச்சுவர் மற்றும் மீன் இறங்குதளம், ஏலக்கூடம் அமைக்க தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ. 6 கோடியே 83 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இறங்குதளம், ஏலக்கூடம்

இதையடுத்து இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று குட்டியாண்டியூர் கடற்கரையில் நடைபெற்றது. விழாவுக்கு மீன்பிடி துறைமுக திட்ட செயற்பொறியாளர் (நாகை) ராஜ்குமார் தலைமை தாங்கினார். உதவிசெயற்பொறியாளர் ரபீந்திரன் மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கடல் அரிப்பு தடுக்கும் வகையில் நேர்கல் தடுப்புச்சுவர் மற்றும் மீன் இறங்கு தளம், ஏலக்கூடம் அமைப்பதற்கு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி பொறியாளர் கவுதமன், ஆய்வாளர் பாலசுப்ரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி, செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அமுர்தவிஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story