மீன் பிடி திருவிழா: மீன் குழம்பு வாசனையில் மூழ்கிய கிராமம்..!


மீன் பிடி திருவிழா: மீன் குழம்பு வாசனையில் மூழ்கிய கிராமம்..!
x

ஒடுவன் பட்டி கிராமத்தில் உள்ள ஊரணியில் மீன்கள் பிடிக்கப்பட்டு கிராமத்தார்களுக்கு பங்கு வைக்கப்பட்டது.

ஒடுவன் பட்டி,

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி கிராமத்தில் அந்த கிராமத்துக்கு பாத்தியப்பட்ட சின்ன தொண்டைமான் ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் மீன் பிடி திருவிழா நடத்த கிராமத்தார்கள் முடிவு செய்தனர்.

அதனடிப்படையில் மீன் பிடித்திருவிழா இன்று நடைபெற்றது. ஒடுவன்பட்டி கிராம மக்கள் மட்டும் மீன் பிடி திருவிழாவில் கலந்துகொண்டு மீன்களை பிடித்தனர்.

முன்னதாக கிராம அம்பலகாரர் தலைமையில் ஒடுவன் பட்டியில் அமைந்துள்ள சின்ன தொண்டைமான் ஊரணியில் பொதுமக்கள் இறங்கி மீன்களை பிடிக்க அம்பலக்காரர் அனுமதி வழயங்கியுடன் கிராம மக்கள் மின்னல் வேகத்தில் ஊருணியில் இறங்கி மீன்கள் பிடித்தனர்.

பிடிக்கப்பட்ட ஜிலேபி, கெண்டை கெளுத்தி போன்ற மீன்களை ஒடுவன் பட்டி கிராம பொதுமக்களுக்கு தலைக்கட்டு வரி போடப்பட்டு ஆயப்பாடியில் மீன்களை கொட்டி ஒடுவன் பட்டி பொதுமக்களுக்கு ஊர் அம்பலக்காரர் தலைமையில் பங்கு வைக்கப்பட்டு பிரித்துக் கொடுக்கப்பட்டது .

ஓடுவன்பட்டியில் அனைவரது இல்லத்திலும் மீன் குழம்பு வைத்து மீன் குழம்பு திருவிழா விருந்து நடைபெற்றது. ஓடுவன்பட்டி கிராமமே மீன் குழம்பு வாசனையால் கமகமத்தது.


Next Story