பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா


பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில்  முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
x

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று முதல் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியை சுஜிதா வரவேற்றார். கல்வியின் முக்கியத்துவம், கல்லூரி கல்வியை சிறப்பான முறையில் பயின்று பல்வேறு துறைகளில் சாதனை படைக்க மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பேராசிரியர்கள் விளக்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் செந்தில்குமார் மாணவர்களை வாழ்த்தி பேசினார். அனைத்து துறை தலைவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள். விழாவில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story