விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழி வகுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேச்சு


விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழி வகுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்-தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேச்சு
x

தனி பட்ஜெட் மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழி வகுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

விருதுநகர்

ராஜபாளையம். மே.24-

தனி பட்ஜெட் மூலம் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழி வகுத்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.

நலத்திட்ட உதவி

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று தமிழகத்தில் பல பகுதிகளில் தொடங்கி வைத்தார். இதையொட்டி ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழி வகுத்துள்ளார். இந்நிகழ்வில் உதவி இயக்குனர் பத்மாவதி, ஊரக வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், வேளாண்மைத்துறை அலுவலர் தனலட்சுமி, நீர்வளத்துறை பொறியாளர் சந்திரமோகன் மற்றும் விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில் 200 குடும்பங்களுக்கு தலா 3 தென்னங்கன்றுகள், 15 விவசாயிகளுக்கு தலா 5 கிலோ உளுந்து விதைகளும், 5 விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான், 5 விவசாயிகளுக்கு விசைத் தெளிப்பான், 125 பேருக்கு காய்கறி விதை பொட்டலம், 20 விவசாயிகளுக்கு பிளாஸ்டிக் மற்றும் காய்கறி நெகிழி கூடை மானியத்தில் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கோவர்தனன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் முனியாண்டி செய்திருந்தார்.


Next Story