ஜெயங்கொண்டத்தில் பா.ம.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஜெயங்கொண்டத்தில் பா.ம.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார 13-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலக்கரி இருப்பதாக கூறி நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்தியது. அவர்களுக்கு இதுநாள்வரை போதிய இழப்பீடும் வழங்கப்படவில்லை. நிலங்களும் திருப்பி அளிக்கப்படவில்லை. இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வந்தது. இந்நிலையில் தமிழக அரசு நிலங்களை 11 கிராமங்களுக்கு திருப்பி பொதுமக்களிடமே வழங்கலாம் என உத்தரவிட்டதை அடுத்து ஜெயங்கொண்டம் நால்ரோட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி சங்க துணை செயலாளர் செந்தில் மற்றும் ராமதாஸ், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தங்கராசு, ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் ராஜேஷ், நகர செயலாளர் பரசுராமன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் கொளஞ்சிநாதன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர், வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டு அவ்வழியாக வந்த பொதுமக்களுக்கும், பஸ் பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.