கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம்


கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்கும் பணி தீவிரம்
x

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

சென்னை

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் கடந்த 20-ந் தேதி ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு எரிந்த தீயை 6 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்தநிலையில் 2-வது முறையாக நேற்று முன்தினம் மீண்டும் கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீப்பிடித்து எரிந்தது.

தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மாநகராட்சி தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2-வது நாளாக நேற்றும் குப்பை கிடங்கில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

ஆனால் குப்பைகள் புகைந்து கொண்டே வருவதால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. பொக்லைன் எந்திரம் மூலம் குப்பையை கிளறி அதில் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தி வருகிறார்கள். புகை மூட்டத்தால் வண்ணாரப்பேட்டை ,கொருக்குப்பேட்டை எழில்நகர், ஆர்.ஆர். நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கண் எரிச்சல், மூச்சுத்திணறலால் அவதிப்பட்டனர்.


Next Story