விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலம்


விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலம்
x

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர்.

பெரம்பலூர்

விழிப்புணர்வு ஊர்வலம்

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வார்கள். அப்போது தீ விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பெரம்பலூரில் நேற்று மாலை தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பெரம்பலூர்-அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ஹக்கீம் பாட்ஷா முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

துண்டுபிரசுரங்கள்

ஊர்வலமானது பெரம்பலூர் நகர்ப்பகுதியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் சென்று தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடம் தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது தொடர்பான விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் தீயணைப்பு வீரர்கள் வழங்கினர்.

ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் செய்திருந்தார்.


Next Story