பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - மக்கள் நீதி மய்யம்


பட்டாசு ஆலைகளில் விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - மக்கள் நீதி மய்யம்
x

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.

சென்னை,

பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள அழகுசிறை கிராமத்தில் பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தகவல் மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பட்டாசு ஆலை விபத்துகளில் உயிர்கள் பறிபோவது தொடர்கதையாகிவிட்டது.

வாழ்வாதாரத்துக்காக ஆபத்தை உணர்ந்தே இத்தொழிலில் ஈடுபடும் பணியாளர்களின் வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க சிறப்புத் திட்டம் வகுத்து, முறையாகச் செயல்படுத்த வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது."

இவ்வாறு அதில் கூறியுள்ளது.



Next Story