தீக்குளித்து தொழிலாளி தற்ெகாலை
அருப்புக்கோட்டையில் தீ்க்குளித்து தொழிலாளி தற்ெகாலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 60). நெசவு தொழிலாளி. இவருடைய மனைவி கல்யாணி (50). நாகராஜன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு 3 மாதங்களுக்கு முன் தனது மகள் வீட்டிற்கு சென்ற கல்யாணியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் வீட்டின் பின்புறம் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் நாகராஜனை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கல்யாணி அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.