பத்ரகாளியம்மன் கோவிலில் தீ மிதி விழா


பத்ரகாளியம்மன் கோவிலில் தீ மிதி விழா
x
தினத்தந்தி 4 March 2023 1:00 AM IST (Updated: 4 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

தேவூர்:-

தேவூர் அருகே அரசிராமணி குள்ளம்பட்டி ஏரிக்கரை பகுதியில் பத்ரகாளியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தில் முதலில் பூசாரி பூங்கரகத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினார். தொடர்ந்து பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் இந்த தீ மிதி விழாவில் எதிர்பாராத விதமாக திடீரென ஒருவர் குண்டத்தில் தவறி விழுந்தார். உடனே அருகில் இருந்த விழாக்குழுவினர் அவரை உடனே தூக்கி விட்டதால் அவர் எவ்வித காயமும் இன்றி தப்பினார்.


Next Story