புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் தீ


புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் தீ
x

புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் தீப்பிடித்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கு திருக்கட்டளை ரோட்டில் உள்ளது. நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் இங்கு கொட்டப்பட்டு மலை போல குவிந்து கிடக்கிறது. இந்த குப்பை கிடங்கில் அவ்வப்போது தீப்பிடித்து எரிவது வழக்கம். இந்த நிலையில் இன்று மாலை குப்பை கிடங்கில் கிழக்கு பகுதியில் திடீரென கரும்புகை எழுந்து தீப்பிடித்தது. இந்த தீ மள மளவென பரவியது. இதுகுறித்து அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் நேற்று மாலை மழை பெய்ததால் அதன் மூலமும் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.


Related Tags :
Next Story