தீத்தடுப்பு ஒத்திகை


தீத்தடுப்பு ஒத்திகை
x
தினத்தந்தி 21 April 2023 6:45 PM GMT (Updated: 21 April 2023 6:45 PM GMT)

குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயில் தாக்கம் காரணமாக ஆங்காங்கே வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனை தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் குன்னூரில் உள்ள பாஸ்டியர் ஆய்வகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், தீ விபத்துகளை தடுப்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீ விபத்து ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, வீடுகளில் சமையல் கியாஸ் சிலிண்டரில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைப்பது, அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் விபத்து ஏற்படும் போது தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைப்பது என தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இதில் பாஸ்டியர் ஆய்வகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story