முன்விரோதம் காரணமாக மாட்டு கொட்டகைக்கு தீ வைப்பு


முன்விரோதம் காரணமாக  மாட்டு கொட்டகைக்கு தீ வைப்பு
x

முன்விரோதம் காரணமாக மாட்டு கொட்டகைக்கு ஒருவா் தீ வைத்தாா்.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள தொண்டூரை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் முருகேசன் (வயது 57). விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் ரவி (33). இவர்களுக்கிடையே முன்விரோதம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, நிலத்தில் இருந்த முருகேசனின் மாட்டு கொட்டகைக்கு மர்ந நபர் தீ வைத்துவிட்டதாக தெரிகிறது. இதில் கொட்டகையில் இருந்த 2 மாடுகள் தீக்காயமடைந்தன. மேலும் அங்கிருந்த வைக்கோல் போர் முழுவதும் எரிந்து சாமபலானது.

இதுகுறித்து, முருகேசன் செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதில், முன்விரோதம் காரணமாக ரவி, தனது மாட்டுகொட்டகை மற்றும் வைக்கோல் போருக்கு தீ வைத்துவிட்டதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் ரவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story