ஓட்டலில் தீ விபத்து
தென்காசியில் ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.
தென்காசி
தென்காசி தெப்பக்குளம் அருகில் ஒரு இட்லி கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த கடை ஊழியர்கள் இரவு உணவுக்காக சமையல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கியாஸ் சிலிண்டரில் கசிவு காரணமாக தீப்பிடித்தது. இதைப் பார்த்ததும் ஊழியர்கள் வெளியே வந்து விட்டனர். சிறிது நேரத்தில் தீ மேலும் பரவியது.
இதுகுறித்து உடனடியாக தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த், நிலைய அலுவலர் கணேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதுதொடர்பாக தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story