புதுக்கோட்டை நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ
புதுக்கோட்டை நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை நகராட்சியின் குப்பைக்கிடங்கு திருக்கட்டளை செல்லும் சாலையில் உள்ளது. புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது. கோடை காலம் தொடங்கி விட்டாலே இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீப்பிடித்து எரிவது வழக்கம். இந்த நிலையில் குப்பைக்கிடங்கில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென எரிந்து பரவியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
Related Tags :
Next Story