கவுந்தப்பாடி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி விவசாயி பலி


கவுந்தப்பாடி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி விவசாயி பலி
x

கவுந்தப்பாடி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி விவசாயி பலி ஆனார்.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே வீடு தீப்பிடித்து எரிந்ததில் உடல் கருகி விவசாயி பலி ஆனார்.

விவசாயி

கவுந்தப்பாடி அருகே உள்ள குட்டிபாளையம் சாயுபுகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுடைய இளைய மகன் சந்திரமோகன் (வயது 46). விவசாயி. திருமணம் ஆகவில்லை. சந்திரமோகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குள் மதுபோதையில் படுத்து தூங்கி விட்டதாக தெரிகிறது. அவருடைய தாய் சரஸ்வதி அருகில் உள்ள கொட்டகையில் படுத்து தூங்கினார்.

தீப்பிடித்தது

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சந்திரமோகனின் வீட்டின் முன்புறம் உள்ள கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டதும் அக்கம் பக்கத்தினர் பதறியடித்து எழுந்து சந்திரமோகனை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர்் எழுந்திருக்கவில்லை. இதனால் அக்கம் பக்கத்தினர் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து சந்திரமோகனை எழுப்ப முயன்றனர். இதில் அவர் வீட்டில் இருந்து வெளியே எழுந்து வர முயன்றபோது புகை மூட்டத்தினுள் தடுமாறி தீயில் விழுந்துவிட்டார்.

சாவு

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் வீட்டின் உள்ளே பார்த்தபோது சந்திரமோகன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

இதுபற்றி அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் அங்கு சென்று சந்திரமோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Related Tags :
Next Story