பேய்க்குளத்தில் 15 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
பேய்க்குளத்தில் 15 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
தூத்துக்குடி
சாத்தான்குளம்:
பேய்க்குளத்தில் கடைகள் உரிமம் இல்லாமலும், சுகாதாரம் இல்லாமலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யபடுவதாக புகார் எழுந்தது. இதை ெதாடர்ந்து பேய்க்குளம் பஜாரில் உள்ள கடைகளில் ஆழ்வார்திருநகரி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், சோமசுந்தரம், ஜேசுராஜ். தியாகராஜன், சுப்பிரமணியன், ஞானராஜ், யோவான் குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் உரிமம் இல்லாத மற்றும் சுகாதாரம் பேணாத 15 கடைகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story