வனவிலங்குகள் போல் சத்தம் எழுப்பும்கருவிகளை விற்ற 3 கடைகளுக்கு அபராதம்
தர்மபுரி
வனப்பகுதிகளில் சட்டவிரோதமாக வேட்டைக்கு செல்பவர்கள் முயல் போல் சத்தம் எழுப்பும் ஹாரன்களை வடிவமைத்து பயன்படுத்தி வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இவ்வாறு விலங்குகள் போல் சத்தம் எழுப்பும் ஹாரன்களை தயாரிக்க பயன்படும் கருவிகள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து தர்மபுரியில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைகளில் வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது 3 கடைகளில் இத்தகைய கருவிகளை வனவிலங்குகளை வேட்டையாட செல்வோருக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர்கள் 3 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story