திட்டக்குழு உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது


திட்டக்குழு உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
x
தினத்தந்தி 8 Jun 2023 12:15 AM IST (Updated: 8 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது என்று கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலுக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது என்று கலெக்டர் ஆஷாஅஜீத் தெரிவித்துள்ளார்.

திட்டக்குழு உறுப்பினர்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- மாவட்ட திட்டமிடும் குழு (பிளானிங் கமிட்டி) உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சியில் உள்ள 16 உறுப்பினர்கள், 4 நகராட்சிகளில் உள்ள 117 வார்டு உறுப்பினர்கள், 11 பேரூராட்சி வார்டுகளில் உள்ள 167 உறுப்பினர்கள் சேர்த்து மொத்தமுள்ள 300 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த கமிட்டிக்கு 12 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் மாவட்ட ஊராட்சியில் இருந்து 9 உறுப்பினர்களையும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் இருந்து 3 உறுப்பினர்களும் சேர்த்து 12 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வாக்குப்பதிவு

இந்த தேர்தலில் மொத்தம் மாவட்ட ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் 300 பேர் வாக்களிக்க உள்ளனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 10-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். வருகிற 12-ந் தேதி வேட்பு மனுக்கள் சரிபார்க்கப்படும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 14-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

23-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கான முதல் கூட்டம் வருகிற 28-ந் தேதி நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.. முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story