அரசு பள்ளி ஆசிரியர்கள் கள ஆய்வு
அரசு பள்ளி ஆசிரியர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர்
தாயில்பட்டி,
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டது. இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் 75 பேர் களப்பயணமாக விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். அவர்கள் கோவை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குனர் மணிவேல், முதல்வர் ராஜா, தொல்லியல் துணை இயக்குனர் சிவானந்தன் ஆகியோர் தலைமையில் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளம் தொல்லியல் கண்காட்சியினை பார்வையிட்டனர். அவர்களுக்கு பொருட்களின் சிறப்புகள் குறித்து அகழ்வாராய்ச்சி இயக்குனர் பொன் பாஸ்கர் எடுத்து கூறினார்.
Related Tags :
Next Story