வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் களஆய்வு


வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் களஆய்வு
x
தினத்தந்தி 19 May 2023 12:30 AM IST (Updated: 19 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகள் களஆய்வு செய்தார்.

தென்காசி

ஆலங்குளம்:

ஆலங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப்பணிகளை ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம் நேரில் கள ஆய்வு செய்தார். 2022-24-ம் நிதியாண்டில் மேற்படி திட்டத்தில் பலபத்திரராமபுரம் கிராமத்தில் தரிசு நில தொகுப்பு அமைய இருக்கும் திடலினையும் விரிவான திட்ட அறிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

அப்போது, தென்காசி வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கனகம்மாள், ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் அறிவழகன், தோட்டக்கலை உதவி இயக்குனர் கோபிகிருஷ்ணன், துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி விதை அலுவலர் சேர்மன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மணிகண்டன், சுமன், தோட்டக்கலை உதவி அலுவலர் ராமலட்சுமி மற்றும் விவசாயிகள் உடன் சென்றனர்.



Next Story