விஸ்வேஸ்வரசாமி-விசாலாட்சியம்மன் சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம்


விஸ்வேஸ்வரசாமி-விசாலாட்சியம்மன்  சுப்பிரமணியசாமி கோவில்  கும்பாபிஷேகம்
x

திருப்பூர் நல்லூர் விஸ்வேஸ்வரசாமி-விசாலாட்சியம்மன் மற்றும் சுப்பிரமணியசாமி கோவில்களின் மகா கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

திருப்பூர்

திருப்பூர் நல்லூர் விஸ்வேஸ்வரசாமி-விசாலாட்சியம்மன் மற்றும் சுப்பிரமணியசாமி கோவில்களின் மகா கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

விஸ்வேஸ்வரசாமி கோவில்

திருப்பூர் தெற்கு வட்டம் நல்லூர் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் விஸ்வேஸ்வரசாமி-விசாலாட்சியம்மன் மற்றும் சுப்பிரமணியசாமி கோவில்களின் கும்பாபிஷேக பெருவிழா இன்று (புதன்கிழமை) காலை நடக்கிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், இரண்டாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனைகள், விக்ரஹங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மூன்றாம் கால பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனைகள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று மகா கும்பாபிஷேகம்

இன்று (புதன்கிழமை) காலை 5.30 மணிக்கு விசாலாட்சியம்மன் சமேத விஸ்வேஸ்வர சாமி கோவில்,சுப்பிரமணியசாமி கோவில்களின் விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது.

கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்கமிட்டியினர், இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

மேலும் கும்பாபிஷேகத்தை காண திருப்பூரை சுற்றியுள்ள பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என்பதால் திருப்பூர் மாநகர போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story