தேவகோட்டை அருகே ேகாவில் திருவிழா: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்


தேவகோட்டை அருகே ேகாவில் திருவிழா: சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்
x

தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டை அருகே கோவில் திருவிழாவையொட்டி நடந்த பந்தயத்தில் மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்து சென்றன.

கோவில் திருவிழா

தேவகோட்டை அருகே வீரை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வீரை-வேலாயுதபட்டினம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 22 வண்டிகள் கலந்துகொண்டு பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 9 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை வீரை சுதாகர் வண்டியும், 2-வது பரிசை கல்லல் உடையப்பா நாச்சியப்பன் மற்றும் ஜெமினிப்பட்டி ஆண்டிபாலன் வண்டியும், 3-வது பரிசை துரும்புபட்டி மாதவன் வண்டியும், 4-வது பரிசை ஆறாவயல் மெய்யப்பன் வண்டியும், 5-வது பரிசை பெரியவீரை அழகிய மீனாள் பாஸ்கரன் வண்டியும் பெற்றது.

சின்ன மாட்டு வண்டி பந்தயம்

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்துகொண்டு முதல் பரிசை கைக்குடி ராஜேந்திரன் மற்றும் கல்லுப்பட்டி அழகு ஆகியோர் வண்டியும், 2-வது பரிசை மலம்பட்டி காயத்திரி ஸ்டோர்ஸ் வண்டியும், 3-வது பரிசை கீழப்பூங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் வண்டியும், 4-வது பரிசை பெரியவீரை பாஸ்கரன் வண்டியும், 5-வது பரிசை பொன்குண்டுப்பட்டி கருணாநிதி ஆகியோர் வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பந்தயத்தின் போது சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டிகளை சாலையின் இருபுறமும் நின்றிருந்த பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.


Next Story