பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
வடக்கன்குளம்:
பழவூர் அருகே உள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்த காமராஜ் மனைவி லதா (வயது 41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். காமராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். பின்னர் ஊருக்கு வந்த அவர் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்லவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது லதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பழவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, லதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story