பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கூடங்குளம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
கூடங்குளம்:
கூடங்குளம் அருகே உள்ள சவுந்திரலிங்கபுரம், இந்திரா காலனியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவர் வீடு கட்டுவதற்காக 2½ சென்ட் இடத்தின் பத்திரத்தை பழவூர் புதிய காலனி தெருவை சேர்ந்த ஜெயராஜ் (62), விஜயதேவி (57) ஆகியோரிடம் கொடுத்து ரூ.2½ லட்சம் பெற்றுள்ளார். பின்னர் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்ததால் சாந்தியை நேற்று முன்தினம் ஜெயராஜ், விஜயதேவி ஆகியோர் அவதூறாக பேசியுள்ளனர். இதனால் நேற்று அதிகாலையில் சாந்தி தனது வீட்டின் முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூடங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயராஜ், விஜயதேவி ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தார்.
Related Tags :
Next Story