மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி
மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவில் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் மாணவர்களை விட, மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட, மாணவிகள் 1.67 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரியலூர் மாவட்டத்திலும் மாணவர்களை விட, மாணவிகள் 2.51 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
668 பேர் 100-க்கு 100 மதிப்பெண்
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் இயற்பியல் பாடத்தில் 35 பேரும், பொருளாதாரம் பாடத்தில் 4 பேரும், வேதியியல் பாடத்தில் 154 பேரும், வணிகவியல் பாடத்தில் 45 பேரும், உயிரியியல் பாடத்தில் 227 பேரும், தாவரவியல் பாடத்தில் 6 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 75 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 32 பேரும், கணித பாடத்தில் 38 பேரும், வணிக கணிதம் பாடத்தில் 2 பேரும், வரலாறு பாடத்தில் 11 பேரும், கணினி தொழில்நுட்பம் பாடத்தில் ஒருவரும், கணினி பயன்பாடு பாடத்தில் 25 பேரும், விலங்கியல் பாடத்தில் 13 பேரும் என மொத்தம் 668 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 181 பேர் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 487 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் அரசு பள்ளிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் 95.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 2-வது இடமும், அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 95.06 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று 6-வது இடமும் பிடித்தது.