2 குழந்தைகளுடன் பெண் மாயம்


2 குழந்தைகளுடன் பெண் மாயம்
x

அரக்கோணத்தில் 2 குழந்தைகளுடன் பெண் மாயமானார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பாப்பான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மாபாட்ஷா (வயது 35). இவர், திருப்பதியில் தையல் தொழிலாளியாக ேவலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி ஜீனத் (31). இவர்களுக்கு ஆஷியா (8) என்ற மகளும், ஆஷிப் (6) என்ற மகனும் உள்ளனர். மனைவி, பிள்ளைகள் பாப்பான்குளத்தில் உள்ள வீட்டில் விசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜீனத் பக்கத்து தெருவில் உள்ள தனது தாயாரிடம், நான் எனது மகள் மற்றும் மகனுடன் பூங்காவுக்கு சென்று வருவதாக கூறி விட்டு வெளிேய சென்றார். ஆனால் அவர், வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து திருப்பதியில் உள்ள மாபாட்ஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை. இதுகுறித்து அவர், அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய், மகள், மகனை தேடி வருகின்றனர்.


Next Story