பெண் தீக்குளிப்பு


பெண் தீக்குளிப்பு
x

பெண் தீக்குளித்தார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள இனாம் அகரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மதியழகி(வயது 23). இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மதியழகி நேற்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதியழகி குடும்ப பிரச்சினை காரணமாக தீக்குளித்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story