மாணவர் சேர்க்கையை திரும்ப பெறுபவர்களுக்கு கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும் - யு.ஜி.சி அறிவுறுத்தல்


மாணவர் சேர்க்கையை திரும்ப பெறுபவர்களுக்கு கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும் - யு.ஜி.சி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 3 March 2024 11:28 PM IST (Updated: 4 March 2024 12:24 PM IST)
t-max-icont-min-icon

மாணவர் சேர்க்கை திரும்ப பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும் என்று யு.ஜி.சி. அறிவுறுத்தி இருக்கிறது.

சென்னை,

பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) செயலாளர் செயலாளர் மனீஷ் ஆர்.ஜோஷி, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை பெறும் மாணவர்கள், தங்கள் சேர்க்கையை திரும்ப பெறும்போது அவர்களின் கல்வி கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு யு.ஜி.சி. அறிவுறுத்தி இருக்கிறது.

இருப்பினும், மாணவர் சேர்க்கையை மாணவர்கள் திரும்ப பெறும்போது, கட்டணத்தை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக உயர்கல்வி நிறுவனங்கள் மீது புகார்கள் வருகின்றன. சில கல்லூரிகள் கல்வி கட்டணத்தை திரும்ப கொடுக்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை திரும்ப பெறும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை கல்வி நிறுவனங்கள் திரும்ப வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் கல்லூரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story