மாங்காட்டில் தந்தை, சகோதரி கொலை: மனநல காப்பகத்தில் சேர்ப்பதாக பேசியதால் கொன்றேன் - சினிமா கலைஞர் வாக்குமூலம்


மாங்காட்டில் தந்தை, சகோதரி கொலை: மனநல காப்பகத்தில் சேர்ப்பதாக பேசியதால் கொன்றேன் - சினிமா கலைஞர் வாக்குமூலம்
x

மனநல காப்பகத்தில் சேர்ப்பதாக பேசியதால் தந்தை, சகோதரியை கொலை செய்ததாக சினிமா கலைஞர் பிரகாஷ் தெரிவித்தார்.

செங்கல்பட்டு

கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடிசன் நகர் ராகவேந்திரா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வராஜ் (வயது 65). இசை பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சாந்தி (55). சினிமா துறையில் துணை நடிகையாக நடித்து வருகிறார். இவர்களுக்கு ராஜேஷ் பிராங்கோ (40), பிரகாஷ் (32) என்ற மகன்களும், பிரியா (38) என்ற மகளும் இருந்தனர். ராஜேஷ் பிராங்கோவுக்கு திருமணமாகி படப்பையில் வசித்து வரும் நிலையில் பிரியா திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரகாஷ் மட்டும் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் சினிமா துறையில் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக பணி புரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் பிரியாவின் வீட்டுக்கு சென்ற பிரகாஷ் அவருடன் தகராறில் ஈடுபட்டு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார். முன்னதாக பிரகாஷ் வீட்டில் இருந்த தனது தந்தையையும் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மாங்காடு போலீசார் பிரகாசை கைது செய்து விசாரித்தனர்.

மனநல காப்பகத்தில் சேர்ப்பதாக...

விசாரணையில் குடிப்பழக்கத்திற்கு ஆளான பிரகாஷ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வந்ததாகவும் தெரிகிறது. அங்கு பணம் செலுத்தி பார்க்க முடியாததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் மனநல காப்பகத்தில் சேர்ப்பதற்காக அவரது பெற்றோர், சகோதரி அனைவரும் பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது. பிரகாசுக்கு மாத்திரைகள் வாங்குவதற்காக அவரது தாய் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்த நிலையில் அவர் தந்தை மற்றும் சகோதரியை கொலை செய்திருப்பதும் மாத்திரை வாங்க தாய் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. பிரகாசை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் அரசு மனநல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.


Next Story