இரும்பு கம்பியால் அடித்து தந்தை கொலை
இரும்பு கம்பியால் அடித்து தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
பாடாலூர்:
விவசாயி
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலை (வயது 55). விவசாயி. இவரது மகன் வினோத் (28). செங்கமலை அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து வீட்டில் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ேநற்று முன்தினம் இரவு பிரச்சினை செய்த செங்கமலையிடம், 'ஏன் அடிக்கடி குடித்துவிட்டு தகராறு செய்கிறீர்கள்' என்று வினோத் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வினோத் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து செங்கமலையை தாக்கியதாக கூறப்படுகிறது.
கைது
இதில் பலத்த காயமடைந்த செங்கமலையை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த செங்கமலை சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து பாடாலூர் போலீசார் கொலை வழக்குப்பதிந்து, வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.