சாலைகளை சீரமைக்கக்கோரி உண்ணாவிரதம்
சாலைகளை சீரமைக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர்.
கீழ்வேளூர் அருகே இருக்கை ஊராட்சியில் தெற்குத் தெரு வடக்கு தெரு, பள்ளிக்கூட தெரு சாலைகளை சீரமைத்து செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர்கள் பெரியசாமி, சண்முகம் ஆகியோர் தலைமை தாங்கினர். நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து, போராட்டத்தை தொடங்கி வைத்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் அபுபக்கர், மாவட்ட குழு உறுப்பினர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் ரமேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் சசிகலா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனுமதி பெற்று புதிய சாலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது, இந்த பணிகள் மே மாதத்திற்குள் முடித்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்ேபரில் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.