ஜாக்டோ- ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம்


ஜாக்டோ- ஜியோ சார்பில் உண்ணாவிரத போராட்டம்
x
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் ஜாக்டோ- ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரத போராட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஜாக்டோ- ஜியோ சார்பில் வாழ்வாதார உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலம் எதிரில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் மு.சிவக்குமார், ஞானசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் எம்.சிவலிங்கம் வரவேற்றார். வி.மேகநாதன், அருள்மொழிவர்மன் ஆ௳ியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் தியோபர்ராவின்சன் கலந்துகொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வி.சி.பாபு.கே.பாண்டியன், பா.உதயகுமார், கே.எம்.நேரு, வ.பிரேம்குமார், சரவணன் உள்பட ஏராளமானோர் பேசினார்கள்.

15 அம்ச கோரிக்கைகள்

உண்ணாவிரத போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், காலி பணியிடங்களை நிரப்புதல், சரண்டர் விடுப்பு தடை ஆணையை ரத்து செய்ய வேண்டும், ஊக்க ஊதியம் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்க மாநில பொருளாளர் சி.ஜெயக்குமார், பழரசம் கொடுத்து முடித்து வைத்து பேசினார். உண்ணாவிர போராட்டத்தில் ஒன்றிய தலைவர் ரமேஷ், கந்திலி செயலாளர் திருநாவுக்கரசு, சத்தியசீலன், பாண்டியன் உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story