குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு


குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
x

காவிரியில், தமிழகத்துக்குரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததுடன், மண்பானைகளை காவடியாக எடுத்து வந்து உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

காவிரியில், தமிழகத்துக்குரிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்ததுடன், மண்பானைகளை காவடியாக எடுத்து வந்து உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் வெளிநடப்பு

தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியவுடன் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்துக்குரிய தண்ணீரை தொடர்ந்து தர மறுத்து வரும் கர்நாடக அரசை கண்டிக்கிறோம். தொடர்ந்து ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வரும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை மாற்ற வேண்டும். காய்ந்து வரும் குறுவை நெற்பயிரை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருகிய நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் ஒட்டுமொத்தமாக கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ப்போது தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், ஒரு தலைப்பட்சமாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவருக்கு எதிராகவும் விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு விவசாயிகள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

மண்பானைகளை உடைத்து போராட்டம்

இதேபோல் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் சிலர் காவிரி தண்ணீரை பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 205 டி.எம்.சி. தண்ணீர் வழங்கக்கோரியும், அனைத்து பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் மண் பானையில் தண்ணீரை நிரப்பி, காவடி எடுத்து வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.கருகும் பயிரை காப்பாற்ற குடத்தில் தண்ணீர் எடுத்து சென்று வயலில் ஊற்றக்கூடிய நிலையை வெளிப்படுத்தும் வகையில் மண்பானையில் விவசாயிகள் தண்ணீர் நிரப்பி வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள், அந்த மண்பானைகளை தரையில் போட்டு உடைத்துவிட்டு மத்திய அரசுக்கு எதிராகவும், கர்நாடக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.


Next Story