அமைதி கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு


அமைதி கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு
x

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுடன் அமைதி கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுடன் அமைதி கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு

செய்யாறு தாலுகா மேல்மா, அத்தி, இளநீர் குன்றம் உள்பட 9 கிராமங்களில் சிப்காட் விரிவாக்க திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த நடவடிக்ைக எடுக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 9 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சிப்காட் விரிவாக்க திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறு டவுன் புறவழி சாலையில் அமைந்துள்ள சிப்காட் விரிவாக்க மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று தங்களுடைய எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைதி கூட்டம்

இந்த நிலையில் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஆர்.அனாமிகா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கும் போது இந்த கூட்டத்தில் மேல்மா சிப்காட் எதிர்ப்பு குழுவினர், விவசாயிகள் மட்டுமே இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

வெளிநடப்பு

ஆனால் இங்கு ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும், ரியல் எஸ்டேட் அதிபர்களும் உள்ளனர். இதனால் நாங்கள் பங்கேற்க மாட்டோம் என தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளியேறி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story