வந்தவாசியில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

வந்தவாசியில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு
x

விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலரை நிரந்தர பணிநீக்கம் செய்யக்கோரி வந்தவாசியில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலரை நிரந்தர பணிநீக்கம் செய்யக்கோரி வந்தவாசியில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கே.எஸ்.யுவராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் ஆர்.பொன்னுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, ஏ.பி.வெங்கடேசன், ஸ்ரீதர், வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த பிள்ளையார்குளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் விவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை கண்டித்து விவசாயிகள் பேசினர். அவரை தற்காலிக பணிநீக்கம்தான் செய்துள்ளனர். தங்கபாண்டியனை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்திய விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story