கரும்புகளை கொள்முதல் செய்யக்கோரிநாமம் போடப்பட்ட மண்சட்டி ஏந்தி விவசாயிகள் ஊர்வலம்


கரும்புகளை கொள்முதல் செய்யக்கோரிநாமம் போடப்பட்ட மண்சட்டி ஏந்தி விவசாயிகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 27 Dec 2022 12:30 AM IST (Updated: 27 Dec 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

கரும்புகளை கொள்முதல் செய்யக்கோரி நாமம் போடப்பட்ட மண்சட்டி ஏந்தி விவசாயிகள் ஊர்வலம் சென்றனர்.

மயிலாடுதுறை

அரசு முறைப்படி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பை சேர்த்து விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் குத்தாலம் அருகே வானாதிராஜபுரம் கிராமத்தில் கரும்பில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது கரும்பு கொள்முதல் செய்யாத தமிழக அரசை கண்டித்து கரும்பை ஆற்றில் வீசி எரிந்ததால் பரபரப்ப ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாமம் போடப்பட்ட மண்சட்டியை ஏந்தி விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர். அந்த மண் சட்டியில் கோரிக்கை மனுவும் இருந்தது. மனுவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் அளித்தனர். அப்போது தமிழக அரசின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த விவசாயிகள், கரும்புகளை கொள்முதல் செய்யாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.


Next Story