திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன போராட்டம்
திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கி திருவள்ளுவர் வேடம் அணிந்து வந்திருந்தார். அப்போது அவர் கலெக்டர் அலுவலகம் நுழைவாயில் முன்பு அமர்ந்து ஓலைச்சுவடி எழுதுவது போன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், உழவுத் தொழிலை விட்டு பலர் சென்றாலும் இன்றைய நிலையில் பிற தொழிலை விட விவசாயம் முதன்மைத் தொழிலாக உள்ளது. அதனால் தமிழகத்தின் 125 லட்சம் டன்னாக உணவு தானியத்தை பெருக்க வேளாண்மை துறைக்கு கூடுதல் நிதி அரசு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து இந்த கோரிக்கைகள் எடுத்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.