கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 11 Dec 2022 12:30 AM IST (Updated: 11 Dec 2022 1:32 AM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது .

திண்டுக்கல்

'ம‌லைக‌ளின் இள‌வ‌ர‌சி'யான‌ கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும். அந்த வகையில் நேற்று வாரவிடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். தமிழகத்தில் நிலவிய மாண்டஸ் புயல் காரணமாக கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோய‌ர் பாயிண்ட், குணாகுகை, பில்லர்ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட‌ சுற்றுலா த‌ல‌ங்க‌ளில் மரக்கிளைகள் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தன. இதனால் அந்த சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலா ப‌ய‌ணிக‌ளுக்கு வ‌ன‌த்துறை அதிகாரிகள் த‌டை விதித்தனர்.

இருப்பினும் கொடைக்கான‌லில் நிலவிய சீதோஷ்ண சூழலை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்தனர். மேலும் தரை இறங்கிய மேகங்கள், மலையை வருடி சென்ற மேகக்கூட்டத்தை பார்த்து ரசித்தனர். அத்துடன் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள‌ பூக்க‌ளையும், இயற்கை அழகினையும் சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மேற்கொண்டும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.



Next Story