கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு எலுமிச்சை விவசாயிகள் சங்கத் தலைவர் கே. பிரேம்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ராமசுப்பு, நவநீதன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். கோவில்பட்டி தாலுகா இடைசெவல் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலைகளை நிறுவுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெறும் போது, நீர்நிலை ஓடைகள் மூடப்படும். இதனால் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும். எனவே, இப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வளங்கள், நீர் ஆதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் உதவி கலெக்டர் ஜெயாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story