பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x

பெரம்பலூரில் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ராஜூவ் கரும்பு பேரவை தலைவர் ஆர்மரி வரதராஜன் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் வனவிலங்குகளால் சேதமாகியுள்ள அனைத்து பயிர்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும்.

320 கோரிக்கை மனுக்கள்

கரும்பு பயிரில் கொக்கக்கோ, இடைக்கண்புழு, வேர்ப்புழு தாக்குதலால் விளைச்சல் பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், நிவாரணம் கேட்டு 320 கோரிக்கை மனுக்களை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி வடிவேல்பிரபுவிடம் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story