நிலக்கரி திட்டத்துக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்


நிலக்கரி திட்டத்துக்கு உடனடியாக தடை  விதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 6 April 2023 7:00 PM GMT (Updated: 6 April 2023 7:00 PM GMT)

நிலக்கரி திட்டத்துக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நாகூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சக்திவேல், விஜயராஜ், மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், மூர்த்தி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர். டெல்டா மாவட்டங்களில் மண்ணையும், மக்களையும் அழித்து ஒழிக்கின்ற எந்த ஒரு திட்டங்களையும் அனுமதிக்கக்கூடாது. சி.பி.சி.எல். நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் காக்க வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி சென்னையில் நடைபெறும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் திரளானோர் கலந்துகொள்வது. மக்களுக்கு பேராபத்தை உண்டாக்க கூடிய நிலக்கரி எடுப்பு போன்ற திட்டங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என சட்டம் இயற்றிய பின் எந்தவொரு இடத்திலும், குழாய் பதிப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தீர்மானங்கள் குறித்து சங்கத்தினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story