பி.எம்.கிசான் தவணை தொகை பெற ஆதார் எண்ணை விவசாயிகள் இணைக்க வேண்டும்


பி.எம்.கிசான் தவணை தொகை பெற ஆதார் எண்ணை விவசாயிகள் இணைக்க வேண்டும்
x

பி.எம்.கிசான் தவணை தொகை பெற ஆதார் எண்ணை விவசாயிகள் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவி தொகையாக 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளில், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்திற்கான 13-வது தவணை தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது செல்போன் மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் இ-கே.ஒய்.சி. எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்தும், பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். எனவே பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக கூடுதல் விவரம் பெற வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் அல்லது தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story