விவசாயிகள் நூதன போராட்டம்
வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டம்
மண் வளத்திற்கு ஆபத்து தரும் தரக்கட்டுப்பாட்டிற்கு உட்படாத உரங்கள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்யக்கோரி திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு வாக்கடை புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.
இதில் விவசாயிகள் ஆடு மற்றும் புலியின் முகமூடி அணிந்து தரையில் கட்டம் போட்டு ஆடு புலி ஆட்டம் விளையாடி காண்பித்தகதங ஆடுகளாக இருக்க கூடிய விவசாயிகளை அதிகாரிகள் புலி போல் வஞ்சிக்கின்றனர் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் குறித்து வாக்கடை புருஷோத்தமன் கூறுகையில், மண்வளத்திற்கு ஆபத்து தரும் தரக்கட்டுப்பாட்டிற்கு உட்படாத உரங்கள் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.
உரக்கடைகளில் ரசாயன, பயோ உர மாதிரி சேகரித்து ஆய்வு செய்ய வேண்டும். முத்தரப்பு கூட்டத்தில் வலியுறுத்திய கோரிக்கையை நிறைவேற்றாமல் உர வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் வேளாண்மை இணை இயக்குனரை கண்டிக்கிறோம் என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோரிக்கையை வலியுறுத்தி இணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.