விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்


விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
x

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

தஞ்சாவூர்

கும்பகோணம், மார்ச்.29-

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக துணை மேலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் கருப்பூர், சாக்கோட்டை பகுதி விவசாயிகள் சற்குணம், சீதாராமன், பழனிவேல், குணசீலன் உள்ளிட்ட விவசாயிகள் வழங்கிய மனுவில் கூறி இருப்பதாவது:-கும்பகோணத்தில் 3-ம் கட்ட பைபாஸ் சாலை அமைக்க கடந்த 2017-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கவிவசாயிகள் முழு சம்மதம் தெரிவிக்கிறோம்.ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென நெடுஞ்சாலைத்துறையினர் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்கு மாறாக, தற்போது விவசாயிகள் சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களில் புகுந்து பைபாஸ் சாலை அமைக்க அளவீடு மேற்கொண்டு கொடிகள் நட்டுச் சென்றுள்ளனர்.எனவே கரூப்பூர், சாக்கோட்டை விவசாயிகளின் நலன் கருதியும், பொதுமக்களின் நலனுக்கு ஆதவாகவும், பைபாஸ் சாலையை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் கும்பகோணம் , பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் உள்ளிட்ட தாலுக்காவை சேர்ந்த விவசாயிகள், கலந்து கொண்டனர்.


Next Story