புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்
திருவையாறு அருகே கண்டியூரில் புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்
திருவையாறு;
திருவையாறு அருகே கண்டியூரில் புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புறவழிச்சாலை
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த கண்டியூர் காட்டுக்கோட்டை பாதை எதிர்புறம் திருவையாறு புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. கீழத்திருப்பூந்துருத்தி, கண்டியூர், கல்யாணபுரம் 1-ம் சேத்தியை சேர்ந்த விவசாயிகள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
ஆதரவு
உண்ணாவிரதத்துக்கு விவசாயி தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தை காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர் விமல்நாதன் தொடங்கி வைத்து விவசாயிகளை வாழ்த்தி பேசினார். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் சண்முகநாதன் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசினார்.
Related Tags :
Next Story