கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்


கலெக்டர் அலுவலகத்தில் நாளை விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை நடக்கிறது

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை நடக்கிறது

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் அனைத்து துறை மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும். எனவே விவசாயிகள் இந்த குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்றும் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் வழங்கி தீர்வுகாணலாம் என்றும் கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.


Next Story